நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
மாவலிக்கு ராசி பலன்கள், ஆண்டு பலன்கள் சொல்லிப் பழக்கமில்லை. ஆனால், புத்தாண்டின் தொடக்கத்திலே நடந்த சில வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் அச்சமூட்டுகின்றன. ஒரு நாட்டின் அதிபரை, ஒரு வல்லரசு நாடு ரவுடிக் கும்பலைப்போல கடத்திப்போகிறது. அமெரிக்கா, வெனிசுலாவைப் பிடித்ததால்... சீனா, தைவானைப் பிடித்தால் தப்பில்லை என்று யோசனைகள் முன்மொழியப் படுகிறது. இஸ்ரேலிய அதிபர் நெதன்யாகுவை விசாரித்த நீதிபதி மர்மமான முறையில் இறக்கிறார். ஈரான் நாட்டு எல்லையில் குர்திஷ் வீரர்கள் அத்துமீறி நுழைய, துருக்கி தந்த தகவலால் உஷாராகும் ஈரான் ராணுவம் அவர்களைக் கொன்றழிக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் 2026 சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எழ மறுக்கிறது.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
வீரத்தில் டிரம்ப் மற்றும் மோடி இருவரில் யார் சிறந்தவர்?
மன்னர் காலத்திலாவது அரசர்கள் படைக்கு தலைமை தாங்கிப் போவார்கள், வாள் சுழற்றுவார்கள், அம்பு எய்வார்கள். நவீன அரசியலில் சண்டையிடப் போவதெல்லாம் ராணுவம், விளைவை அனுபவிக்கப்போவதெல்லாம் நாட்டு மக்கள். இதில் அதிபர், பிரதமரின் வீரத்தை எங்கிருந்து அளவிடுவது?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/mavali1-2026-01-12-16-51-34.jpg)
மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
நான்கரை லட்சம் புதிய ஐபோன்களை ஏற்று மதிசெய்து சாதனை புரிந்துள்ளதாகக் கூறுகிறாரே ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்?
மேக் இன் இந்தியா என்றார்கள், இப்போது சீனாவில் உற்பத்தியாகும் உதிரிபாகங்களை இந்தியாவில் அசெம்பிள் செய்கிறார்கள். இதில் இந்தியாவுக்கு வருமானம் இருக்கிறது. பெருமை என்ன இருக்கிறது?
கே. வல்லவன், பேரணாம்பட்டு
பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிக்கப்பட்டுள்ளது?
இல்லை, ஹெச்.டி. ரேவண்ணா தற்போது வரை சிறையில்தான் உள்ளார். ஜனவரி 12-ஆம் தேதி அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வருகிறது. சமயங்களில் ஒரே நேரத்தில் பல வழக்குகள் ஒருவர்மீது பதியப்படும். அதில் ஏதாவது ஒரு வழக்கில் அவரை நீதிமன்றம் விடுவிக்கும். இருந்தாலும், பிரதான வழக்கில் விடுதலை என தீர்ப்பு வரும்வரை அவர் விடுவிக்கப்படமாட்டார்.
எஸ்.இளையவன், சென்னை
ஒரு சிகரெட்டின் விலை 70 ரூபாய், இனி புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடுமா?
இது சமூக ஊடகத் தகவல். புதிதாக விதிக்கப்பட்ட கலால் வரியால் ஒரு சிகரெட்டின் விலை தோராயமாக 2 ரூபாய் முதல் 6 வரை அதிகரிக்கலாம். புதிய விலையால் புகைப்பவர்கள் சிலர் சிகரெட்டை விடலாம். மற்றபடி பெரிய மாறுதல் ஏற்படப்போவதில்லை.
மா.சந்திரசேகர், மட்டுமகாதானபுரம்
ஆயிரம் அமித்ஷா வந் தாலும் தமிழ்நாட்டில் எதுவும் மாறாதென்கிறாரே சீமான்?
அதென்ன அப்படிச் சொல்லிவிட்டார்... கூட் டணியே வேண்டாமென்ற எடப்பாடி, பா.ஜ.க.வுடன் கூட் டணியில் சேர்ந்துவிட்டார். ஆட்சியில் பங்கு கிடையாதென்றவர், போகப் போக அந்தக் கொள்கையிலிருந்தும் மாறலாம். அமித்ஷா வின் தாக்கத்தை சீமான் குறைத்து மதிப்பிடுகிறார்போல.
கே.எம். ஸ்வீட்முருகன், கரடிகொல்லப்பட்டி
இனி பாஸ்டேக் கிடையாது, ஏ.ஐ. துணை யுடன் கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடி வரப்போகிறதாமே?
சுங்கச்சாவடியை தூக்கினால் சந்தோஷப்பட லாம். பாஸ்டேக்கை அகற்றுவதற்கு சந்தோஷப்பட ஒன்றுமில்லை.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
நவீன வாஷிங்மெஷின் த.வெ.க. என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாக்கியிருக்கிறதே?
த.வெ.க. ஆட்சிக்கும் வரவில்லை, பெரிய ஊழல் வாதிகள் என்று சொல்லத் தக்கவர்கள் அக்கட்சியில் சேர்ந்துவி டவும் இல்லை. அட்வான் ஸாகவே முத்திரை குத்துகிறார் கள்போல.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
நடிகர் விஷால் சத் தத்தையே காணோமே?
தலைக்குமேல் அழுத்துகிற கடனில் குரல் நசுங்கிப் போயி ருக்கவேண்டும். நீதி மன்றத்துக்கும் கடன் காரர்களுக்கும் பதில் சொல்வதில் ஆற்றல் தீர்ந்துவிடுவதால் வெளியில் சத்தம் குறைந்து போயிருக்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் பைனான்ஸ் ஏற்பாடு பண்ணி கொடுத்துப் பாருங்கள், விஷா லின் குரலைக் கேட்கலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/mavali-2026-01-12-16-51-17.jpg)